முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த காலக்கெடுவுக்கும் இந்தியா அஞ்சாது: ராகுலுக்கு பியூஷ் கோயல் பதிலடி

சனிக்கிழமை, 5 ஜூலை 2025      இந்தியா
peaus-Ghoyal 2023-07-20

புதுடெல்லி, எந்த காலக்கெடுவுக்கும் அஞ்சி இந்தியா செயல்படாது என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.

அமெரிக்கா- இந்தியா இடையே வர்த்தக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்ணயித்து உள்ள பரஸ்பர வரி விதிப்பு காலக்கெடு வருகிற 9-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் எந்தவொரு வர்த்தக ஒப்பந்தத்தையும் இறுதி செய்ய இந்தியா அவசரப்படவில்லை.தேசிய நலன் தான் முக்கியம் என குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி.யும். பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி பிரதமர் மோடியை கடும் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் வலை தள பதிவில் மத்திய அமைச்சர்பியூஸ் கோயல் எவ்வளவு வேண்டுமானலும் மார் தட்டிக்கொள்ளலாம். என் வார்த்தையை கவனியுங்கள். மோடி டிரம்பின் வரி விதிப்பு காலக்கெடுவுக்கு சாந்தமாக அடிபணிவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர்பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது: எந்த காலக்கெடுவுக்கும் அஞ்சி இந்தியா செயல்படாது. நாட்டின் நலனை மனதில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.  ராகுல் காந்தியும், அவரது கட்சியும் எதிர்மறை விஷயத்தையே பரப்பி வருகின்றனர். இதனால், ராகுல் காந்தியை யாரும் ஒரு பொருட்டாக எடுப்பது இல்லை. அவர்கள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து