முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடப்பாடி பழனிசாமிக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு

சனிக்கிழமை, 5 ஜூலை 2025      தமிழகம்
Edappadi 2020 11-16

சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவருக்கான பாதுகாப்பு Z+ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் வரும் ஜூலை 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதற்கான பாடல் மற்றும் லோகாவை நேற்று இ.பி.எஸ். வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து வரும் ஜூலை 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் இந்த சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் இ.பி.எஸ்.. இந்தச் சூழலில் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் வகையில், இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இசட் பிளஸ் பாதுகாப்பில் 12 கமாண்டோ படை வீரர்கள், 52 காவலர்கள் இடம் பெறுவார்கள். எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு அடிக்கடி வரும் வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து