எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர், கடலூர் ரயில் விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளிக்கு கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் நேற்று முன்தினம் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். ஒரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்கை பெற்று வருகிறார். இந்நிலையில் தனியார் பள்ளி வேனில் உதவியாளர் இல்லாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மோகன், தனியார் பள்ளிக்கு சம்பவத்தன்று வேனியில் உதவியாளர் இல்லாதது ஏன் என்று கேட்டு நேற்று நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ரயில்வே துறையின் 6 பேர் கொண்ட விசாரணை குழு விபத்து நடந்த செம்மங்குப்பம் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்தவர்களிடம் விபத்து பற்றி கேட்டறிந்தனர்.
இதைத்தொடந்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற அக்குழுவினர் அங்கு டாக்டர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவர் விஷ்வேஸ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வேன் ஓட்டுநர் சங்கர் மேல்சிகிச் சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


