முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை ரூ.440 உயர்வு

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2025      வர்த்தகம்
Gold 2024-04-06

சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 11) பவுனுக்கு ரூ.440 உயர்ந்து விற்பனையானது. 

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பல்வேறு நாடுகளுக்கு வரி உயர்வை அறிவித்து வருகிறார். இதனால் சர்வதேச அளவில் வணிக சந்தை பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினமும், நேற்றும் தங்கம் விலை உயர்ந்து விற்பனையானது. 

சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,075-க்கு விற்பனையானது. அதேபோல பவுனுக்கு ரூ.440 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.72,600-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.72,160-க்கு விற்பனையானது. 24 காரட் தங்கத்தின் விலையும் நேற்று கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,900-க்கு விற்பனையானது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 என விலை உயர்ந்து ஒரு கிராம் 7,480-க்கு விற்பனையானது. வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.120.10 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,20,100-க்கும் விற்பனையானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து