முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழக்கின் சாட்சிகளை அழிக்க முயற்சி: தென்கொரியா முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2025      உலகம்
South-Koria 2025-03-07

Source: provided

சியோல் : தென் கொரியா அதிபராக இருந்தவர் யூன் சுக் இயோல். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.

இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஒரே நாளில் அவசர நிலை வாபஸ் பெறப்பட்டது. இதனால் யூன் சுக் இயோல் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், அவர்மீது தேசத்துரோக வழக்கு உள்ளிட்டவை பதியப்பட்டு கைது செய்யப்பட்டார். 52 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். புதிய அதிபராக லீ ஜே மியுங் செயல்பட்டு வருகிறார். 

இந்நிலையில், நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தது தொடர்பான வழக்கில் சாட்சிகளை அழிக்க முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் முயன்றதாக புகார்கள் எழுந்தன. சியோல் கோர்ட்டில் இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து யூன் சுக் இயோல் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து