முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாக் அப் மரணங்கள்: விஜய் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்

சனிக்கிழமை, 12 ஜூலை 2025      அரசியல்
Vijay- 2024-06-28

சென்னை, லாக் அப் மரணங்கள் தொடர்பாக, சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் த.வெ.க. தலைவர் விஜயின் தலைமையில் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கடந்த நான்கு வருடங்களில் லாக்கப்பில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்கும் வகையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வைத்து, தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் சென்னை சிவானந்தா சாலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது.

இதற்காக பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு, லாக்கப் மரணங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இன்று நடைபெற உள்ள போராட்டத்திற்கு போலீசார் தடை விதிக்கலாம் என எண்ணி முன்னதாகவே அவர்களை அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளனர்.

அதன்படி, காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் சென்று உயிரிழந்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் ஸ்ரீ குடும்பத்தினர், அயனாவரத்தைச் சேர்ந்த விக்னேஷ் குடும்பத்தினர், கொடுங்கையூரைச் சேர்ந்த அப்பு என்ற ராஜசேகர் குடும்பத்தினர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமணியின் குடும்பத்தினர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை குடும்பத்தார், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த செந்தில் குடும்பத்தினர் ஆகியோர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து