முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 15 ஜூலை 2025      உலகம்
Sukhala 2025-07-15

Source: provided

கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக  அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்பில்  தரையிறங்கியது.  

அமெரிக்காவின், 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயண திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25ம் தேதி, 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின், 'பால்கன் 9' ராக்கெட் வாயிலாக பூமியில் இருந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். திட்டமிட்டப்படி  தங்கள் பயணத்தை நிறைவுசெய்து பூமியை நோக்கி டிராகன் விண்கலம் வாயிலாக நேற்று மீண்டும் புறப்பட்டனர். தொடர்ந்து, 22 மணி நேர பயணத்திற்குபின், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்பில் நேற்று மாலை 3:01 மணிக்கு, 'ஸ்ப்லாஷ் டவுன்' முறையில் டிராகன் விண்கலம் தரையிறங்கியது. கடலில் இறங்கிய விண்கலம், கப்பலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, அதன் கதவை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திறக்கப்பட்டன. முதலாவதாக நாசாவின் பெக்கி விட்சன் வெளியே அழைத்து வரப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து 2வது நபராக சுபான்ஷூ சுக்லா விண்கலத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது உற்சாகமாக கைகளை அசைத்தபடியே சுக்லா சென்றார். மற்றவர்களும் அடுத்தடுத்து வெளியே அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் 7 நாட்கள் தனிமையில் இருப்பார்கள் என தெரியவந்துள்ளது. சுபான்ஷூ சுக்லா பூமிக்கு திரும்பும் நிகழ்வை, லக்னோவில் உள்ள சிட்டி மான்டெசரி பள்ளியில் நேரலையில் அவரது குடும்பத்தினர் பார்த்தனர். அப்போது குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் வடித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து