முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிஜே அருணாச்சலம் நடிக்கும் உசுரே

புதன்கிழமை, 16 ஜூலை 2025      சினிமா
Usure 2025-07-16

Source: provided

ஸ்ரீகிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் உசுரே படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு  அழைப்பாளர்களாக இயக்குனர்கள் ஆர்.வி. உதயகுமார்,  பேரரசு, மிர்ச்சி சிவா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவா பேசியதாவது.. இந்த டீமை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு, சின்ன டீம்மாக இருந்தாலும் ஒரு நேர்த்தியான டீமா தெரியுது... இந்த டீமோட மேக்கப் சசிகுமார் தான் என்னுடைய மேக்அப் மேன்.. நேஷனல் அவார்டு வின்னர்..அவர் இந்த படம் நல்லா வரணும்னு எனக்காக காலையிலேயே வந்து எப்ப போலாம் எப்போ போலாம்னு கேட்கும் போது, இந்த படம் வெற்றி பெறணும்னு இந்த டீம் மொத்தமா சேர்ந்து உழைப்பது தெரியுது என்றார். பின்னர் நாயகன் டிஜே அருணாச்சலம் பேசுகையில், அசுரன் என்ற ஒரு படத்தினால் எனக்கு நிறைய சந்தோஷமும், என் வாழ்க்கையும் மாறியது.. அந்த ஒரு படத்தை பார்த்துவிட்டு வந்து என்னிடம் கதை சொன்ன அனைத்து இயக்குனர்களுக்கும் நன்றி. என்மேல் நம்பிக்கை வைத்த அந்த இயக்குனரில் ஒருவரான நவீனுக்கு நன்றி.. சித்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்... அசுரன் படத்தில் நடித்த கதாபாத்திரத்திற்கு எதிர் மறையான ரோல் இந்த படத்துல எனக்கு.. நான் சிம்புவின் ரசிகன்.. இப்படத்தில் நடிக்கும் பொழுது எனக்கு சிம்பு நடித்த கோவில் படம் தான் நினைவிற்கு வந்தது..  சக்திவேல் கதாபாத்திரத்தை நினைவில் வைத்து தான் இப்படத்தில் நடித்தேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து