முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுவிலக்கு டி.எஸ்.பி. கார் முன்னறிவிப்பின்றி திரும்ப பெறப்பட்டதா? காவல் துறை விளக்கம்

வியாழக்கிழமை, 17 ஜூலை 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, மயிலாடுதுறையில் மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் இன்றி நடந்து சென்றதாக வெளியான செய்திக்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மது விலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வருபவர் சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்ட வாகனம் எந்த காரணமும் தெரிவிக்காமல் அரசு திரும்ப பெற்றதாக தகவல் வெளியானது. இதனால், அவர் தனது வீட்டில் இருந்து காவல் சீருடையுடன் இவர் பணிபுரியும் காவல் நிலையத்துக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றார். இது போலீசாரின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தநிலையில் மயிலாடுதுறையில் மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் இன்றி நடந்து சென்றதாக வெளியான செய்திக்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட காவல்துறை தரப்பில் வெளியிட்ட தகவலின்படி,  மயிலாடுதுறை மதுவிலக்கு துறை டி.எஸ்.பி. சுந்தரேசனுக்கு வாகனம் வழங்கப்படவில்லை என்பது உண்மைக்கு புறம்பான செய்தி.அவருக்கு மாற்று வாகனம் வழங்கப்பட்டது. கடந்த 11-ம் தேதி முக்கிய அலுவலுக்காக அவரது வாகனத்தை பெற்று மாற்று வாகனம் வழங்கப்பட்டது. நேற்று மீண்டும் டி.எஸ்.பி. சுந்தரேசன் பயன்படுத்தி வந்த வாகனமே வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் டி.எஸ்.பி. சுந்தரேசனின்யின் வாகனத்தை முன் அறிவிப்பு இன்றி அரசு திரும்ப பெற்றுள்ளதற்கு தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து