முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வியாழக்கிழமை, 17 ஜூலை 2025      அரசியல்
EPS 2023 03 27

சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.  

சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா எம்.பி, காமராஜர் ஏசி அறை இல்லாமல் தூங்கமாட்டார் என்றும், அவர் இறப்பதற்கு முன்பு கருணாநிதியின் கையை பிடித்துக்கொண்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் நீங்கள்தான் காப்பாற்றவேண்டும் என்றும் கூறியதாக பேசி இருந்தார். அவரது பேச்சுக்கு அ.தி.மு.க., பா.ஜ.க., நா.த.க. உள்ளிட்ட பல கட்சிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டன. 

இந்தநிலையில் அதி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில், கர்மவீரர் காமராஜர் மறையும் தருவாயிலான நிகழ்வுகள் வரலாற்றுக் குறிப்பாக உள்ள போதே, காமராஜர் கருணாநிதியின் கையைப் பிடித்துப் புகழ்ந்தார் என்பது எவ்வளவு பெரிய பச்சைப்பொய்? தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா?  

பெருந்தலைவர் குறித்து சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார்? உங்கள் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர், தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா தானே? அதை வைத்து, சமூக ஊடகங்கள் முழுக்க ஐயா காமராஜர் குறித்த அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பது உங்கள் தி.மு.க. கொத்தடிமைகள் தானே? காமராஜர் குறித்த கருணாநிதியின் பழைய முரசொலி சித்திரங்களை எல்லாம் யாரும் மறந்துவிடவில்லை. அப்படி கர்மவீரர் காமராஜர் மீது பன்னெடுங்காலமாக கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மத்தை, இப்படி ஒரு சர்ச்சை உருவாக்கி, அதன் மூலம் காமராஜர் புகழை மழுங்கடிக்கத் துடிக்கும் அற்ப அரசியலை செய்வது தி.மு.க. தானே?  என அதில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து