முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர், பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் மீண்டும் விளக்கம்

சனிக்கிழமை, 19 ஜூலை 2025      உலகம்
Pak-Army 2023 05 13

Source: provided

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மீண்டும் விளக்கமளித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பிரிவை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அறிவித்தது அமெரிக்க அரசு. இதனை இந்தியா வரவேற்றது. இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு பகிர்ந்துள்ள தகவல் குறித்து பார்ப்போம். ”பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அந்த அமைப்பு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட மற்றும் செயலிழந்த அமைப்பு ஆகும். அந்த பணியை பாகிஸ்தான் அரசு கவனமாக செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அதன் உறுப்பினர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் தீவிரவாதத்தை எதிர்க்கின்ற நாடுகளில் உலகளவில் முன்னணியில் உள்ளது. உலக அமைதிக்காக தீவிரவாத தடுப்பு நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலில் லஷ்கருக்கு பங்கு உள்ளதாக சொல்லும் இந்தியாவிடம் ஆதாரம் ஏதுமில்லை. உலக அளவில் பாகிஸ்தானுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் இந்தியா செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசித்து வரும் மக்களின் வாழ்வியல் நிலை சார்ந்த கவனத்தை இந்தியா திசை திருப்ப பார்க்கிறது” என கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து