முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலை ஒருபோதும் விரும்பவில்லை: எலான்

சனிக்கிழமை, 19 ஜூலை 2025      உலகம்
Elon-Musk 2023 03 28

Source: provided

நியூயார்க் : அரசியலை ஒருபோதும் விரும்பவில்லை ஆனால் வேறு வழியில்லாமல் கட்சித் தொடங்கினேன் என எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து ‘அமெரிக்கா கட்சி’ எனும் அரசியல் கட்சியைத் தொடங்குவதாக ஜூலை முதல் வாரத்தில் அறிவித்தார்.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எலான் மஸ்க், எனக்கு அரசியலில் நுழைவது என்பதில் சற்றும் விருப்பமில்லை. நான் ராக்கெட் தயாரிக்கிறேன், கார்களை, கருவிகளை உருவாக்குகிறேன். ஆனால், தேர்தல் பிரசார வசனங்களை அல்ல. என் நிறுவனம் தயாரிக்கும் பொருள்களை மக்கள் பயன்படுத்துவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். அதைத் தவிர வேறு எனக்கு எதிலும் ஆர்வமமில்லை. ஆனால், எப்போது, இந்த நாட்டின் அமைப்பு மிக மோசமாக உடைந்து போயிருக்கிறதோ, அப்போது என்னால் அமைதியாக இருக்க முடியாது. நாட்டின் எதிர்காலத்துக்கு மோசமான ஆபத்துகள் காத்திருக்கும் என்பதால் வேறு வழியின்றி, அரசியல் கட்சித் தொடங்குவது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறேன் என்று பேசியிருக்கிறார்.

அவர் சிரித்தபடி, மிக சாதாரண உடல் அசைவுகளுடன் மக்களிடையே பேசும் விடியோவையும் அமெரிக்கா கட்சியின் எக்ஸ் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் வழக்கத்துக்கு நேர்மாறாக ஒரு மஞ்சள் நிற துண்டை எலான் மஸ்க் அணிந்திருப்பது, நம்ம ஊர் மக்களிடையே பேசுபொருளாகியிருக்கிறது. இந்திய அரசியல்வாதிகள் போல தோளில் துண்டுபோட்டிருப்பதாக பலரும் அந்த விடியோவில் கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து