முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025      இந்தியா
Masood-Azhar 2025-07-20

Source: provided

புதுடில்லி : பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார். இவர் இந்தியாவில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகளில் முக்கியமானவர். மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் அவர் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.

சமீபத்தில் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ கூறும் போது, மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை. அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கலாம் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மசூத் அசார் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் இடத்தை இந்திய உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது. அவர் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் காணப்பட்டதாக உளவுத் துறை தகவல்கள் வெளியாகி யுள்ளன. இந்த பகுதி மசூத் அசார் முதலில் வசித்த பாகிஸ்தானின் பஞ்சபர் மாகாணம் பஹவல்பூரில் இருந்து 1000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மசூத் அசார் தங்கியிருக்கும் இடத்தில் 2 மசூதிகளுடன், மதரசாக்கள், அரசினர் விடுதி, விருந்தினர் மாளிகைகளும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இடம் ஜம்மு-காஷ்மீரில் இருந்து சுமார் 350 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மசூத் அசார் சத்பரா சாலை பகுதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து