முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி., கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025      இந்தியா
Parliament-1

Source: provided

புதுடெல்லி  : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நேற்று மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கி ஆகஸ்ட் 21 வரை நடைபெறுகிறது. 

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கே. சுரேஷ் மற்றும் ஜெய்ராம் ரமேஷ், சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே, மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல், என்சிபி (சரத் பவார் அணி) எம்.பி. சுப்ரியா சுலே, பாஜக எம்.பி. ரவி கிஷன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், சமாஜ்வாதி கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்பி மஹுவா மாஜி, “ஜார்க்கண்ட் மிகவும் பணக்கார மாநிலமாக இருக்க வேண்டியது, இம்மாநிலத்தில் ஏராளமான கனிம வளங்கள் உள்ளன. ஆனால் அது மூன்று ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, மத்திய அரசு ஜார்க்கண்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. எங்கள் மாநிலத்திற்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கவேண்டும்” என்றார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் பதிலடி தாக்குதலுக்குப் பிறகு நடக்கும் முதல் பாராளுமன்றக் கூட்டத்தொடர் இதுவாகும். இந்தியா - பாகிஸ்தான் போரை ட்ரம்ப் நிறுத்தியதாக கூறுவது குறித்தும் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து