முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முக்கிய முடிவை எடுத்த முகமது ஷமி

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025      விளையாட்டு
Mohammed-Shami

Source: provided

மும்பை : இந்திய அணியில் வாய்ப்பை இழந்த முகமது ஷமி  மீண்டும் கம்பேக் கொடுக்க,  உள்ளூர் போட்டிகளில் விளையாடி இழந்த பார்மை மீட்டெடுக்க  முடிவு செய்துள்ளார்.

முகமது ஷமி... 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின்போது ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் குணமடைந்த அவர் உள்ளூர் தொடர்களில் விளையாடி இழந்தை பார்மை மீட்டெடுத்தார். பின்னர் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினார்.

பார்முக்கு வரவில்லை...

இருப்பினும் அவரால் முன்பு போல் பந்து வீச முடியவில்லை. அவர் கிரிக்கெட்டுக்கு திரும்பி வந்து பல மாதங்களாகிவிட்டன. ஆனால் அவர் தனது சிறந்த பார்முக்கு வரவில்லை. அவர் காயத்தில் இருந்து குணமடைந்து விட்டாலும் செயல்பாடு மந்தமாகவே இருந்து வருகிறது. எனவே இந்திய தேர்வுக்குழு அவரை இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யவில்லை.

விளையாடவில்லை...

இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 5 போட்டிகளிலும் விளையாடும் அளவுக்கு முழு உடற்தகுதியுடன் இல்லை அதனால்தான் அவரை தேர்வு செய்ய முடியாமல் போனதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார். முகமது ஷமி, ஐ.பி.எல். தொடருக்கு பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை.

உள்ளூர் போட்டியில்...

இந்நிலையில் இந்திய அணியில் வாய்ப்பை இழந்த அவர் மீண்டும் கம்பேக் கொடுக்கும் முனைப்போடு தற்போது முக்கிய முடிவு ஒன்றினை எடுத்துள்ளார். அதன்படி உள்ளூர் போட்டிகளில் விளையாடி இழந்த பார்மை மீட்டெடுக்க உள்ளார். வரும் சீசனுக்காக உள்ளூர் போட்டிக்குரிய பெங்கால் அணியின் உத்தேச அணி பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது. இதில் முகமது ஷமி பெயரும் இடம் பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து