Idhayam Matrimony

ஜனாதிபதியுடன் மாநிலங்களவை துணை தலைவர் நாராயண் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025      இந்தியா
Narayanan 2025-07-22

Source: provided

டெல்லி : குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நேற்று முன்தினம் காலை தொடங்கிய நிலையில், மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கரும் அவைக்கு வழக்கம்போல் தலைமைத் தாங்கினார். இந்த நிலையில், நேற்றிரவு மருத்துவக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்வதாக ஜனாதிபதி திரெளபதி முர்முக்கு தன்கர் கடிதம் எழுதினார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று காலை மாநிலங்களவை அவையின் துணைத் தலைவரான ஹரிவன்ஷ் நாராயண் தலைமையில் கூடியது. மேலும், மாநிலங்களவையில் குடியரசு துணைத் தலைவரின் ராஜிநாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டு, முறைப்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த துணை ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் வரை மாநிலங்களவையின் துணைத் தலைவராகவுள்ள ஹரிவன்ஷ், அவையை வழிநடத்தவுள்ளார். இந்த நிலையில், குடியரசு தலைவர் மாளிகைக்கு நேரில் சென்ற ஹரிவன்ஷ், அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். ஹரிவன்ஷ், அடுத்த குடியரசு துணைத் தலைவரா? ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான ஹரிவன்ஷ், 2020 ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் சில மாதங்களில் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவராகவுள்ள ஹரிவன்ஷ், அடுத்த துணை ஜனாதிபதி வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, பிகார் முதல்வர் நிதிஷ் குமாரே துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து