Idhayam Matrimony

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025      தமிழகம்      விளையாட்டு
DCM-1-2025-07-22

சென்னை, விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை  உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவ. மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும், இவ்விழாவில் மாணவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்ட உடற்கல்வி ஆசிரியர் வளநூல் எனும் புத்தகத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். 2024 – 2025 ஆம் கல்வியாண்டில் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று 76 தங்கம், 26 வெள்ளி, 24 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 126 பதக்கங்களை வென்றுள்ளனர்.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று 348 தங்கம், 236 வெள்ளி, 333 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 917 பதக்கங்களை வென்றுள்ளனர். மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று 1,484 தங்கம், 1,522 வெள்ளி, 1,739 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 4,745 பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து