Idhayam Matrimony

பாகிஸ்தானில் மழைக்கு 6 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025      உலகம்
Pak 2025-07-22

Source: provided

சிந்த் : பாகிஸ்தானில் பெய்த தொடர் மழைக்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மேற்கூரை இடிந்து விழுந்தும், மின்சாரம் தாக்கியும், நீரில் மூழ்கியும் பலர் பலியாகி உள்ளனர். இவர்களில், யார் முகமது காலனி பகுதியில் ரஜியா முகேரி (வயது 40) என்ற பெண்ணும், இஸ்லாம் சச்சார் கிராமத்தில் கவீதா சச்சார் (வயது 22) என்ற பெண்ணும் மழை பெய்து கொண்டிருந்தபோது, மோட்டாருக்கு சுவிட்ச் போடும்போது, மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தனர்.

இதேபோன்று, வீட்டுக்கு வெளியே இருந்த மின்கம்பத்தில் கை வைத்ததில், மின்சாரம் பாய்ந்து இம்தாத் அலி சர்கி என்ற 13 வயது சிறுவன் பலியாகி விட்டான். ரஷீத் அலி மற்றும் அபு பக்கர் ஆகிய சகோதரர்கள் 2 பேரும் குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மிஸ்பா என்ற 7 வயது சிறுவன் விளையாடும்போது, குளத்தில் மூழ்கி பலியானான். கனமழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதில், மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டு நீண்ட நேரம் சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. பாகிஸ்தானில் நடப்பு பருவமழை காலத்தில், கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து