Idhayam Matrimony

தொடரும் சோகம்: ஐக்கிய அரபு நாட்டில் கேரள பெண் மரணம்

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

திருவனந்தபுரம் : ஐக்கிய அரபு நாட்டில் கேரள பெண் மர்மமான முறையில் இறந்தார்.

கேரளாவின் கொல்லம் நகரை சேர்ந்தவர் ராஜசேகரன் பிள்ளை. இவருடைய மனைவி துளசிபாய். இந்த தம்பதியின் மகள் அதுல்யா (வயது 29). அவருடைய கணவர் சதீஷ். 2014-ம் ஆண்டு இந்த தம்பதியின் திருமணம் நடந்தது. அப்போது, ஒரு பைக் மற்றும் 43 சவரன் நகை போடப்பட்டது. ஆனாலும், கூடுதல் வரதட்சணை கேட்டு, அதுல்யாவை கணவர் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது. உடல், மனரீதியாக பல ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில், அதுல்யா அவருடைய பிளாட்டில் மரணம் அடைந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சதீஷின் வரதட்சணை கொடுமையே இதற்கு காரணம் என அதுல்யாவின் பெற்றோர் குற்றச்சாட்டாக கூறியுள்ளனர். 

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் விபன்சிகா மணியன் (வயது 32). கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் முடிந்ததும், அவருடைய கணவரான நிதீஷ் வலியவீட்டில் உடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றார். ஷார்ஜாவில் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வந்திருக்கிறார். 

இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 8-ந்தேதி விபன்சிகாவும், அவருடைய ஒரு வயது மகளும் மரணம் அடைந்து கிடந்தனர். கேரள போலீசாரிடம் விபன்சிகாவின் பெற்றோர், புகார் தெரிவித்து உள்ளனர். அதில், அவருடைய கணவரான நிதீஷ் வலியவீட்டில் மற்றும் உறவினர்கள் சேர்ந்து வரதட்சணை கேட்டு, உடல் மற்றும் மனதளவில் துன்புறுத்தி வந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர். 

இதுபற்றி பல்வேறு பிரிவுகளின் கீழ் கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவை சேர்ந்த இந்த 2 பெண்களும் கணவர் குடும்பத்தினரின் வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என புகார் அளிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து