முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த கில்

வியாழக்கிழமை, 31 ஜூலை 2025      விளையாட்டு
31-Ram-50

Source: provided

லண்டன்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன் குவித்த  கேப்டன் என்ற மாபெரும் சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். 

கடைசி டெஸ்ட் போட்டி... 

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் - ஜெய்ஸ்வால் களமிறங்கினர். 

ஆமை வேகத்தில்... 

இதில் ஜெய்ஸ்வால் 2 ரன்களில் விரைவில் ஆட்டமிழந்தார். அடுத்து சாய் சுதர்சன் களமிறங்கினார். இந்திய அணி தடுப்பாட்டத்திலேயே கவனம் செலுத்தியது. இதனால் ரன் ரேட் ஆமை வேகத்தில் நகர்ந்தது. சிறிது நேரம் நிலைத்து விளையாடிய கே.எல். ராகுல் 14 ரன்களில் அவுட்டானார். பின்னர் கேப்டன் சுப்மன் கில் வந்தார். உணவு இடைவேளை  வரை இந்திய அணி 23 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் எடுத்திருந்தது. சாய் சுதர்சன் 25 ரன்களுடனும், சுப்மன் கில் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

வரலாற்று சாதனை...

இந்த தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிமுகம் ஆன சுப்மன் கில் ரன் குவிப்பில் அசத்தி வருகிறார். இந்த தொடரில் இதுவரை 737 ரன்கள் குவித்துள்ளார்.  இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் என்ற மாபெரும் சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். இதற்கு முன்னர் சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள சுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் 655 ரன்களுடன் விராட் கோலி 3-வது இடத்தில் உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து