முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் வீரர் 43 பந்தில் 153 ரன்கள்

சனிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Afghanistan 2024-06-25

Source: provided

இங்கிலாந்தில் இ.சி.எஸ். டி10 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் லண்டன் கவுன்டி கிரிக்கெட் அணியும் கில்ட்போர்டு அணியும் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லண்டன் கவுன்டி கிரிக்கெட் அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 226 ரன்கள் எடுத்தது.  இதில் இந்த அணியில் கேபட்ன் உஸ்மான் கனி 43 பந்தில் 153 ரன்கள் எடுத்தார். இதில் 11 பவுண்டரி, 17 சிக்ஸர்கள் அடங்கும்.

கில்ட்போர்டு பந்து வீச்சாளர் வில் எர்னியின் வீசிய ஒரே ஓவரில் 45 ரன்களை எடுத்து உஸ்மான் கனி பெரும் சேதத்தை ஏற்படுத்தினார். ஒரே ஓவரில் 6+ நோ பால், 6, 4+ வைட், 6, 4+ நோ பால், 6, 0, 6, 4 என மொத்தம் 45 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய கில்ட்போர்டு அணி 155/4 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஆஸ்கர் மிகைல் 47, டோமனிக் 33 ரன்கள் எடுத்தார்கள்.  இந்தப் போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் லண்டன் கவுன்டி கிரிக்கெட் அணி வென்றது. உஸ்மான் கனி (28 வயது) ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

____________________________________________________________________________________

2-வது வீரராக ரூட் சாதனை 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் அடித்தன.  இந்த இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஆன ஜோ ரூட் 29 ரன்கள் அடித்தார். இதனையும் சேர்த்து சொந்த மண்ணில் (இங்கிலாந்து) இந்தியாவுக்கு எதிராக ஜோ ரூட் இதுவரை 2 ஆயிரம் டெஸ்ட் ரன்கள் அடித்துள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக 2 ஆயிரம் ரன்கள் அடித்த 2-வது வீரர் என்ற அரிய சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன், இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 2 ஆயிரம் டெஸ்ட் ரன்கள் (2,354 ரன்கள்) அடித்து முதல் வீரராக இந்த அரிய சாதனையை நிகழ்த்தினார். தற்போது 2-வது வீரராக ஜோ ரூட்  இந்த சாதனையை படைத்துள்ளார். 

____________________________________________________________________________________

துலீப் கிரிக்கெட் தொடரில் ஷமி 

துலீப் டிராபி 2025 சீசனுக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலம் அணிக்கு இஷான் கிஷன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த முகமது ஷமி அணியில் இடம் பிடித்துள்ளார். இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி ஸ்டாண்டி பிளேயர்  ஆக இடம் பிடித்துள்ளார்.

அணி விவரம்:- இஷான் கிஷன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன் (துணைக் கேப்டன்), சந்தீப் பட்நாயக், விராட் சிங், டெனிஸ் தாஸ், ஸ்ரீதாம் பாம், ஷரன்தீப் சிங், குமார் குஷாக்ரா, ரியான் பராக், உட்கார்ஷ் சிங், மணிஷி, சுராஜ் சிந்து ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், முகமது ஷமி

ஸ்டாண்டி பிளேயர் :- முக்தார் ஹுசைன், ஆசர்வாத் ஸ்வெயின், வைபவ் சூர்யவன்ஷி, ஸ்வாஸ்டிக் சமல், சுதிப் குமார் கராமி, ராகுல் சிங். கிழக்கு மண்டலம் அணி முதல் போட்டியில் ஆகஸ்ட் 28ஆம் தேதி வடக்கு மண்டலம் அணியை எதிர்கொள்கிறது.

____________________________________________________________________________________

பாத்ரூமில் அழுத கோலி: சாஹல்

2019 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியை தாங்க முடியாமல் அப்போதைய கேப்டன் விராட் கோலி பாத்ரூமில் அழுததாக யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். இந்த ஆட்டத்தில் சாஹல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்து 63 ரன்களை விட்டுக் கொடுத்து தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார்.

இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், "விராட் கோலி களத்தில் உருவாக்கும் ஆற்றலை யாருடனும் ஒப்பிடவே முடியாது.  ஆனால் 2019 உலகக்கோப்பை தொடரின் அடைந்த தோல்விக்கு பின் பாத்ரூமில் விராட் கோலி அழுவதைப் பார்த்தேன். அதுதான் தோனியின் கடைசி போட்டியும் கூட.அந்த போட்டியை நினைக்கும் போதெல்லாம் சிறப்பாக பவுலிங் செய்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றும் என்று கூறினார்.

____________________________________________________________________________________

சாதனையை தவறவிட்ட கில்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.  இந்த நிலையில், நேற்று  (ஆகஸ்ட் 2) மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ஆகாஷ் தீப்  94 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும்.

அதன் பின், ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கேப்டன் ஷுப்மன் கில் 11 ரன்களில் கஸ் அட்கின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கேப்டன் ஷுப்மன் கில் 754 ரன்கள் குவித்துள்ளார். வெளிநாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க ஷுப்மன் கில்லுக்கு 21 ரன்களே தேவைப்பட்ட சூழலில், அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம், வெளிநாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வசமே உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து