முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனிப்பட்ட முறையில் எந்த கட்சியையும் கூட்டணிக்கு வருமாறு நான் அழைக்கவில்லை : எடப்பாடி பழனிசாமி பேட்டி

வெள்ளிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2025      தமிழகம்
EPS 2025-03-17

Source: provided

சென்னை : நான் எந்த கட்சி பெயரையும் குறிப்பிடவில்லை. யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு அ.தி.மு.க. கூட்டணிக்கு வாருங்கள் என்று அழைக்கவும் இல்லை. 2026-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கும் கட்சிகள் எங்களுடன் சேர்ந்து திரள வேண்டும் என்றுதான் கூறினேன்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முதல் கட்ட பிரசாரத்தை முடித்து உள்ளேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அலை அலையாக திரண்டு வந்து ஆதரவு கொடுத்தனர். இதை பார்க்கும் போது தமிழக மக்கள் ஆட்சி மாற்றம் என்பதில் தெளிவாக இருப்பது உறுதியாகி இருக்கிறது.

அது மட்டுமல்ல அந்த அரசியல் மாற்றத்தை அ.தி.மு.க.வால் மட்டுமே ஏற்படுத்த முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள். "காலத்தே பயிர் செய்" என்று சொல்வார்கள். நான் விவசாயி என்பதால் 8 மாதத்துக்கு முன்பே சரியான நேரத்தில் முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கி இருக்கிறேன். இது அ.தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்யும். தாமதமாகி விட்டால் 234 தொகுதிகளுக்கும் செல்ல இயலாது. எனவேதான் இப்போதே மக்களை சந்தித்து வருகிறேன்.

கடந்த தேர்தலின் போது செய்ய முடியாத சில திட்டங்களை சொல்லி தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டது. நாங்கள் நிறைவேற்ற முடியாததை பொய்யான வாக்குறுதிகளாக சொல்ல மாட்டோம். இருக்கிற நிதியை வைத்துக் கொண்டு மக்களுக்கு தேவையானதை செய்து கொடுப்போம். தி.மு.க. தனது 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் போது தமிழகத்தின் மொத்த கடன் ரூ.5.38 லட்சம் கோடியாக உயர்ந்து விடும். இதை எப்படி திருப்பி கொடுப்பது? திறமை இல்லாத அரசால்தான் தற்போது இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது.

சட்டசபை ஒவ்வொரு தடவை கூடும்போதும் போதைப் பொருள் பழக்கம் கிராமம் முதல் நகரம் வரை பரவி விட்டதை நான் சுட்டி காட்டி வருகிறேன். ஆனால் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க தவறி விட்டது. அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து இருப்பதால் தி.மு.க. மிகவும் பயந்து போய் உள்ளது. இதனால் தான் பா.ஜ.க. ஆட்சியில் பங்கு கேட்பதாக தி.மு.க.வினர் திட்டமிட்டு வதந்தி பரப்பினார்கள். இதையும் மீறி அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் நிச்சயமாக ஆட்சி அமைக்கும்.

210 தொகுதிகளில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். மக்கள் எங்களுக்கு தெரிவிக்கும் ஆதரவை பார்த்து தான் இதை நான் சொல்கிறேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்து இவ்வளவு நாட்கள் ஆகியும் 10 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. பணத்தையும், ஆட்களையும் வைத்து 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் மக்கள் அவர்களை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவார்கள்.

சிறுபான்மை மக்களை வாக்கு வங்கிகளாக தி.மு.க. பயன்படுத்தி வருகிறது. ஆனால் அ.தி.மு.க. ஒருபோதும் அப்படி நடந்து கொள்ளாது. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாகவே இருப்போம். தி.மு.க.வை 2026-ம் ஆண்டு தேர்தலில் தோற்கடிக்க ஒருமித்த கருத்து உள்ள கட்சிகள் அனைத்தும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வரவேண்டும் என்று முன்பு நான் கூறினேன். அதை பல கட்சிகள் நிராகரித்து விட்டதாக தகவல்கள் பரப்பப்பட்டன. நான் என்ன சொன்னேன் என்பதை புரிந்து கொள்ளவில்லை.

நான் எந்த கட்சி பெயரையும் குறிப்பிடவில்லை. யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு அ.தி.மு.க. கூட்டணிக்கு வாருங்கள் என்று அழைக்கவும் இல்லை. 2026-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கும் கட்சிகள் எங்களுடன் சேர்ந்து திரள வேண்டும் என்றுதான் கூறினேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து