முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் கனமழை: சுவர் இடிந்து விழுந்து 8 பேர் பலி

சனிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2025      இந்தியா
Delhi-Heavy-rain-2025-08-09

புதுடெல்லி, டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

தலைநகர் டெல்லியில் கனமழை வெளுத்து வாங்கியது.  நகரின் பல்வேறு விடிய விடிய தொடர்ந்தது பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்துள்ளது. மழை காரணமாக சாஸ்திரி பவன், ஆர்.கே.புரம், மோத்தி பாக், கித்வாய் நகர் பகுதியில் கனமழை பதிவானது. சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளது.

நேற்று ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படும் நிலையில் மழை பதிவான காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று நாள் முழுவதும் மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிதமானது முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக டெல்லியின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடிய விடிய பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், டெல்லி ஹரி நகர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியகினர். இன்று காலை 9.16 மணியளவில் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. பலியானவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து