முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் தேர்தல் முறைகேடு: விசாரிக்க சித்தராமையா உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 10 ஆகஸ்ட் 2025      இந்தியா
Siddaramaiah 2023 04 16

Source: provided

பெங்களூரு : கர்நாடகாவில் தேர்தல் முறைகேட்டை விசாரிக்க சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த கர்நாடகா, மாகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அரியானா சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

அவர் கூறியதாவது, "கர்நாடகாவில் 16 இடங்கள் கிடைக்கும் என்று எங்கள் உள் கணக்கெடுப்பு கணித்திருந்தது. ஆனால் எங்களுக்கு ஒன்பது இடங்கள் மட்டுமே கிடைத்தன. நாங்கள் 7 இடங்களில் ஏன் தோற்றோம் என்பதை ஆராய்ந்தோம். குறிப்பாக மகாதேவபுரா தொகுதியில் 1,00,250 வாக்குகள்  ஐந்து வெவ்வேறு முறைகள் மூலம் திருடப்பட்டதாக அவர் கூறினார்.  இதில் போலி வாக்காளர்கள், போலி முகவரிகள் மற்றும் ஒரே முகவரியில் பல வாக்காளர்கள், புகைப்படம் இல்லாத வாக்காளர்கள், படிவம் 6 முறைகேடு செய்தல் ஆகியவை அடங்கும்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, "மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டு தொடர்பான புகார்களை சட்டத்துறை விசாரிக்கும். அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணையை முடித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிடப்படும்" என்று கூறினார்.

 

 .  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து