முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை தங்க முலாம் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பு : கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2025      இந்தியா
Sabarimala 2024-11-16

Source: provided

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க முலாம் காணாமல் போனது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க முலாம் காணாமல் போனது தொடர்பான விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு ஆறு வாரங்களுக்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை தொடர்பான எந்தத் தகவலும் கசியக்கூடாது என்றும், சிறப்பு புலனாய்வுக் குழு சீல் வைக்கப்பட்ட கவரை நேரடியாக நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

விசாரணைத் தகவல்களை வேறு யாருக்கும் வெளியிடக்கூடாது என்றும், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை குறித்து நீதிமன்றத்திற்கு மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், சபரிமலை விவகாரம் குறித்து உன்னிகிருஷ்ணன் போட்டி ஊடகங்களிடம் பேசுவதையும் உயர் நீதிமன்றம் தடை செய்துள்ளது. அதேபோல மாநில காவல்துறைத் தலைவரையும் வழக்கில் ஒரு தரப்பாக உயர் நீதிமன்றம் சேர்த்துள்ளது.

வழக்கில் தற்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பதிவாளர் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், வழக்கின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு, விசாரணைக் குழுவை விரிவுபடுத்தலாம் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தக் குழுவில் மேலும் இரண்டு துணை காவல் கண்காணிப்பாளர்கள் இடம்பெறுவார்கள். 2019 ஆம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் போட்டிக்கு தங்க முலாம் பூசப்பட்ட தங்கத் தகடுகளை வழங்கிய திருவிதாங்கூர் தேவசம் போர்டின் நடவடிக்கையையும் உயர் நீதிமன்றம் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. தேவசம் போர்டு விஜிலென்ஸ் எஸ்பி நேரில் ஆஜராகி, நேற்று காலையில் உயர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து, அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான எஸ்பிஎஸ். சசிதரனுடன் ஆலோசனை செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து