முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்ராம்ஸ் ஏவுகணையை பாக்.கிற்கு விற்கிறது அமெரிக்கா

வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2025      உலகம்
Ukraine 2024 11 20

Source: provided

அமெரிக்கா : பாகிஸ்தானுக்கு அம்ராம்ஸ் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க போர் விவகாரங்கள் துறை கடந்த செப்டம்பர் 30 அன்று பல்வேறு நாடுகளுடனான ஆயுத ஒப்பந்தங்களின் திருத்தப் பட்டியலை வெளியிட்டது. வான் விட்டு வான் பாயும் நடுத்தர தூர அம்ராம்ஸ் ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கு விற்கும் ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகின.

பாகிஸ்தானுக்கு ஆயுத விற்பனை செய்ய புதிய ஒப்பந்தம் போடப்பட்டகாக பரவிய செய்தியை அமெரிக்க அரசு மறுத்துள்ளது. புதிய ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை பராமரிப்பதற்கு மட்டுமே என்று இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தி உள்ளது.

அமெரிக்க போர் விவகாரங்கள் துறை கடந்த செப்டம்பர் 30 அன்று பல்வேறு நாடுகளுடனான ஆயுத ஒப்பந்தங்களின் திருத்தப் பட்டியலை வெளியிட்டது. அதில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தங்களின் வான் விட்டு வான் பாயும் நடுத்தர தூர அம்ராம்ஸ் ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கு விற்கும் ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகின.  

இந்நிலையில் இதுகுறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செப்டம்பர் 30, 2025 வெளியிடப்பட்ட அறிவிப்பு பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கான பாதுகாப்பு மற்றும் உதிரிபாகங்களுக்கான ஏற்கனவே உள்ள இராணுவ விற்பனை ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதைக் குறிக்கிறது. தவறான ஊடக அறிக்கைகளுக்கு மாறாக, இந்த குறிப்பிடப்பட்ட ஒப்பந்த திருத்தத்தில் எந்தப் பகுதியும் புதிய மேம்பட்ட வான் விட்டு வான் பாயும் நடுத்தர தூர ஏவுகணைகளையும் (அம்ராம்ஸ்) வழங்குவதற்கானது அல்ல என்பதை நிர்வாகம் வலியுறுத்த விரும்புகிறது. இந்த ஒப்பந்த திருத்தம், பாகிஸ்தானின் தற்போதைய திறன்களில் எதையும் மேம்படுத்த அல்ல" என்று தெரிவித்துள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து