முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலை சேர்ந்த பிணைக்கைதிகள் 20 பேரை விடுவிக்க ஹமாஸ் முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2025      உலகம்
Hamas 2025-10-12

Source: provided

காசா : இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான உடன்படிக்கையின் படி முதல் கட்டமாக இஸ்ரேலை சேர்ந்த சுமார் 20 பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். அதேநேரத்தில் சிறையில் உள்ள 2,000 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது. இதை ஹமாஸ் தரப்பில் ஒசாமா ஹம்தன் உறுதி செய்துள்ளார்.

ஹமாஸ் தீவிரவாத படையினர் தங்கள் வசம் உள்ள பிணைக் கைதிகளை திங்கட்கிழமை (அக்.13) முதல் விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை முன்னணி சர்வதேச செய்தி நிறுவனத்தின் வசம் ஹமாஸ் தரப்பு உறுதி செய்துள்ளது.

காசா பகுதியில் அமைதி நிலவ செய்வதற்கான ஆலோசனை கூட்டம் இன்று எகிப்து நாட்டில் நடைபெறுகிறது. சுமார் 20 உலக நாடுகள் இதில் பங்கேற்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் இதில் பங்கேற்கிறார். இந்நிலையில், இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தீவிரவாத படையினர் திட்டமிட்டுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான உடன்படிக்கையின் படி முதல் கட்டமாக இஸ்ரேலை சேர்ந்த சுமார் 20 பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். அதேநேரத்தில் சிறையில் உள்ள 2,000 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது. இதை ஹமாஸ் தரப்பில் ஒசாமா ஹம்தன் உறுதி செய்துள்ளார்.

காசா பகுதியில் அமைதிக்கான ஆலோசனை கூட்டம்: காசா பகுதியில் அமைதிக்கான ஆலோசனை கூட்டம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில் எகிப்து நாட்டில் இன்று நடைபெறுகிறது. காசா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு வருவது, அமைதியை நிலவ செய்வது, மத்திய கிழக்கு பகுதியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது, பிராந்திய ரீதியிலான பாதுகாப்பு சார்ந்து புதிய முடிவுகளை எடுப்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து