முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: வேலுச்சாமிபுரத்தில் 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் ஆய்வு: போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் வாக்குவாதம்

சனிக்கிழமை, 1 நவம்பர் 2025      தமிழகம்
CBI-1 2024-11-26

கரூர், கருர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று காலை 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் 3டி ஸ்கேனர் உதவியுடன் காலை 7 மணி முதல் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு நடைபெறும் இடம் இடம் கரூர் ஈரோடு சாலை என்பதால் அப்பகுதியில் இருந்து பணிக்கு செல்லும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தடுப்பு வேலி அமைத்திருந்தனர். இதனால் மக்கள் போலீஸாருடனும், சி.பி.ஐ. அதிகாரிகளுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேல் 110 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை சி.பி.ஐ. அதிகாரிகள் வேலுச்சாமி புறத்தைச் சேர்ந்த கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து 2-வது நாளாக சனிக்கிழமை காலை 7 மணிக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வேலுச்சாமி புரத்திற்கு சென்று வெள்ளிக்கிழமை நடத்திய ஃபாரோபோக்கஸ் கருவி மூலம் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். கரு வழக்கில் எஸ்ஐடி குழு மற்றும் தனி நபர் குழு மற்றும் பொதுமக்கள் அளித்த பல்வேறு வாக்குமூலங்கள் அடிப்படையிலும், வீடியோ ஆதாரங்களின் அடிப்படையிலும் அவற்றினை ஒப்பீடு செய்வதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் வீடியோ ஆதாரங்களை மிகத் துல்லியமாக ஒப்பீடு செய்யும் 3டி லேசர் ஸ்கேனர் கருவியை பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் வாக்குவாதம்: சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற இடத்தினை அங்குலம் அங்குலமாக 3டி ஸ்கேனர் லேசர் கருவியுடன் அளவீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் பணிகள் மேற்கொள்ளும் இடம் கரூர் ஈரோடு சாலை என்பதால் அப்பகுதியில் இருந்து பணிக்கு செல்லும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தடுப்பு வேலி அமைத்திருந்தனர்.

இதனால் அலுவலகங்கள் மற்றும் வேலைக்கு விரைவில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டதால் தடுப்பு வேலியை அகற்றுமாறு சி.பி.ஐ. அதிகாரிகள், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை சமாதானம் செய்து மாற்று வழியாக கோவை சாலைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து