முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 நாட்கள் அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு

சனிக்கிழமை, 8 நவம்பர் 2025      இந்தியா
Murmu 2024-10-20

Source: provided

டெல்லி : அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா ஜனாதிபதி திரெளபதி முர்மு புறப்பட்டு சென்றார்.

இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு 6 நாட்கள் அரசு முறை பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, ஆப்பிரிக்க நாடுகளான அங்கோலா மற்றும் போட்ஸ்வானாவிற்கு திரெளபதி முர்மு செல்கிறார். இந்த இரு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி முர்மு ஆவார்.

தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட திரெளபதி முர்மு நேற்று அங்கோலா நாட்டின் தலைநகர் லுடண்டா செல்கிறார். அங்கு அங்கோலா நாட்டின் ஜனாதிபதியை முர்மு சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். மேலும், அங்கோலா நாட்டின் 50ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் முர்மு பங்கேற்கிறார். அங்கோலா நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி முர்மு உரையாற்றுகிறார்.

அங்கோலா பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 11ம் தேதி போட்ஸ்வானா செல்கிறார். அந்நாட்டின் தலைநகர் கபொரின் செல்லும் முர்மு போட்ஸ்வானா ஜனாதிபதி டுமா டிகொன் பொகோவை சந்திக்கிறார். அதன்பின், போட்ஸ்வானா நாடாளுமன்றத்திலும் ஜனாதிபதி முர்மு உரையாற்றுகிறார். அங்கோலா , போட்ஸ்வானா பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி முர்மு வரும் 13ம் தேதி நாடு திரும்புகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து