முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரின் ஒரே முதல்வர் நிதிஷ்குமார் தான் : ஆளுங்கட்சியின் பதிவு உடனடி நீக்கம்

வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2025      இந்தியா
nitish-kumar

Source: provided

டெல்லி: பீகாரில் நிதிஷ்குமார் தான் முதல்வர் என்று ஒருங்கிணைந்த ஜனதா தளம் சமூக ஊடகத்தில் பதிவிட்டதுடன், அதனை உடனடியாக நீக்கியும் விட்டதாகக் கூறப்படுகிறது.

பீகார் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும்நிலையில், ஆளுங்கட்சியான ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் எக்ஸ் பக்கத்தில், முன்னெப்போதும் இல்லாதது. பீகாரின் முதல்வராக நிதிஷ்குமார் இருந்தார்; இருக்கிறார்; தொடர்ந்து இருப்பார்’’ என்று பதிவிட்டதாகவும், அடுத்த சில நிமிடங்களிலேயே பதிவை நீக்கியதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, பீகாரின் பல்வேறு இடங்களில் ``25-லிருந்து 30, மீண்டும் நிதிஷ்குமார்’’ என்ற சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருக்கின்றன. இருப்பினும், பீகார் தேர்தலில் பா.ஜ.க.வும் பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றிருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவுகின்றன. பீகாரில் நிதிஷ்குமார் தலைமையின்கீழ் தேர்தலில் போட்டியிடுவோம் என்றுதான் பா.ஜ.க. கூறியதேதவிர, நிதிஷ்குமார்தான் முதல்வர் என்று பா.ஜ.க. கூறவில்லை என்று சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவுகின்றன.

மகாராஷ்டிரத்தில் சிவசேனையின் ஏக்நாத் ஷிண்டேவின் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்ட பா.ஜ.க., மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்றதையடுத்து, தேவேந்திர ஃபட்னவீஸை முதல்வராக அறிவித்தது. இதே நிலைமைதான் பீகாரிலும் நிகழ வாய்ப்புகள் இருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். பீகாரில் துணை முதல்வர் சாம்ராட் சௌதரி முதல்வராக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், சுமார் 20 ஆண்டுகளாக முதல்வராக இருந்துவரும் நிதிஷ்குமாரை தவிர்த்து விடவும் முடியாது என்பதை பா.ஜ.க. அறிந்திருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து