முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய வில்வித்தை போட்டி: இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம்

வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2025      விளையாட்டு
14-Ram-92

Source: provided

டாக்கா: வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் 24-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

தென்கொரியாவை... 

24-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் நடந்த காம்பவுண்ட் பெண்கள் அணிகள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஜோதி சுரேகா வென்னம், தீப்ஷிகா, பிரித்திகா பிரதீப் ஆகியோரை கொண்ட இந்திய அணி 236-234 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. 

வர்மா- தீப்ஷிகா... 

இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் 147-145 என்ற புள்ளி கணக்கில் சக நாட்டு வீராங்கனையான 17 வயது பிரித்திகாவை சாய்த்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதனால் பிரித்திகாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் அபிஷேக் வர்மா- தீப்ஷிகா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 153-151 என்ற புள்ளி கணக்கில் வங்காளதேசத்தை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து