எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி காபா மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இந்த நிலையில், காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் காபா மைதானத்தின் தன்மையை பொறுத்தே கம்மின்ஸ் விளையாடுவது குறித்து அணி நிர்வாகம் முடிவு செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போட்டிக்கான ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அணி அறிவிக்கமால் இருந்து வருகிறது.
_____________________________________________________________________________________________________________
தொடர்ந்து 20-வது முறையாக தோல்வி
ராஞ்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய முதலாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. தொடரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி நேற்று (டிச.3) சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள வீர் நாராயணன் சிங் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்றதும் இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுலின் முகத்தில் விரக்தியைக் காண முடிந்தது. இந்தப் போட்டியில் டாஸ்ஸில் தோற்றதன் மூலம், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 20 வது முறையாக டாஸ்ஸை தோற்றுள்ளது. டாஸ்ஸில் தோற்றது குறித்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரவி சாஸ்திரியிடம் இந்திய கேப்டன் கே.எல். ராகுல் பேசுகையில், “இன்றைய (நேற்று) போட்டியில் மிகப் பெரிய அழுத்தம் டாஸ் என்றுதான் நினைக்கிறேன். நீண்ட காலமாகவே நாங்கள் டாஸ்ஸை வெல்லவில்லை. அதனால்தான், நாணயத்தை சுண்டி பயிற்சி செய்து வருகிறேன். ஆனால், அது இன்னும் பலனளிக்கவில்லை” என்றார்.
_____________________________________________________________________________________________________________
இங்கிலாந்து அணியில் வில் ஜாக்ஸ்
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ஒரே மாற்றமாக, காயமடைந்த மார்க் வுட்டுக்கு பதிலாக ஸ்பின் ஆல்-ரவுண்டர் வில் ஜாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசியாக 3 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய வில் ஜாக்ஸ், அதன் பிறகு வெள்ளைப் பந்து தொடர்களிலேயே விளையாடி வந்தார்.
இந்நிலையில், பிரிஸ்பேனில் வியாழக்கிழமை தொடங்கும் பகலிரவு பிங்க் பந்து டெஸ்ட்டில் அவர் களம் காண்கிறார். வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக ஜோஷ் டங், மேத்யூ பாட்ஸ் போன்ற பேஸர்கள் தயார்நிலையில் இருக்கும்போதும், சுழற்பந்துவீச்சாளர் வில் ஜாக்ஸ் இங்கிலாந்து இணைத்துக்கொண்டுள்ளது. சுழற்பந்து வீச்சில் கடந்த இரு ஆண்டுகளாக ஷோயப் பஷீர் இங்கிலாந்து அணியின் பிரதான தேர்வாக இருந்த நிலையில், இந்த ஆஷஸ் தொடரில் அவர் தயார்நிலை வீரராக இருந்தும், அவருக்குப் பதிலாக ஜாக்ஸ் பிளேயிங் லெவனில் தேர்வாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
_____________________________________________________________________________________________________________
இந்திய அணி காலிறுதிக்கு தகுதி
14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதின. லீக் முடிவடைந்த நிலையில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி தொடர்ந்து 3-வது வெற்றியை ருசித்து கால்இறுதியை எட்டியது. அதே சமயம் சுவிட்சர்லாந்து 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் வெளியேறியது.
இதே போல 7 தடவை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி (ஏ பிரிவு), 2 முறை பட்டம் வென்ற அர்ஜென்டினா (சி), ஸ்பெயின் (டி), நெதர்லாந்து (இ), பிரான்ஸ் (எப்) ஆகிய அணிகளும் தங்கள் பிரிவில் முதல் இடத்தை பிடித்து கால் இறுதிக்கு முன்னேறின. 2-வது இடத்தை பிடித்த சிறந்த 2 அணிகளான நியூசிலாந்து (சி பிரிவு), பெல்ஜியம் (டி) ஆகியவையும் தகுதி பெற்றன.இன்று ரேங்கிங் ஆட்டங்கள் நடக்கிறது. கால்இறுதி போட்டிகள் நாளை ( வெள்ளிக்கிழமை) சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
_____________________________________________________________________________________________________________
ஜேக்கப் டஃபி மிரட்டல் பந்துவீச்சு
நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் விளையாடிய நியூசிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன் எடுத்து இருந்தது. நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி மேலும் ரன் எதுவும் எடுக்காமல் 231 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்டஇண்டீஸ் அணி 10 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து சாய் ஹோப் மற்றும் சந்தர்பால் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது. 56 ரன்கள் எடுத்த நிலையில் சாய் ஹோப் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் ரோஸ்டன் சேஸ் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அதனை தொடர்ந்து சந்தர்பால் 52 ரன்னிலும் அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 167 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
_____________________________________________________________________________________________________________
ஹர்ஷித் ராணா மீது நடவடிக்கை
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. இதில் அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது பிரெவிஸ் விக்கெட்டை இந்திய வீரர் ஹர்ஷித் ராணா வீழ்த்தினார். அப்போது வீழ்த்திய வேகத்தில் அவரை முறைத்தபடி வெளியே செல்லுமாறு கை சைகை காட்டினார். இந்நிலையில் டெவால்ட் பிரெவிஸை அவுட்டாக்கிய போது ஹர்ஷித் ராணா செய்த சைகைக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் விதியை மீறியதாக கூறி அவருக்கு ஒரு Demerit புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
கூட்ட நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பு? த.வெ.க. ஆனந்தை கடுமையாக எச்சரித்த புதுவை பெண் எஸ்.பி.
09 Dec 2025சென்னை, கூட்ட நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பு? என்று த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்தை புதுச்சேரி பெண் எஸ்.பி. கடுமையாக எச்சரித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தி.மலையில் வரும் 14-ம் தேதி தி.மு.க. இளைஞரணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
09 Dec 2025சென்னை, திருவண்ணாமலையில் வரும் 14-ம் தேதி தி.மு.க. இளைஞரணி மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
-
புதுச்சேரியில் புதிய அரசியல் அத்தியாயம் துவங்கியுள்ளது: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
09 Dec 2025சென்னை, புதிய அரசியல் அத்தியாயத்தை தொடங்கி உள்ளதாக த.வெ.க. தலைவர் விஜய் பதிவு செய்துள்ளார்.
-
பீகார் மாநில தேர்தல் வெற்றி: தே.ஜ. கூட்டணி எம்.பி.க்கள் பிரதமர் மோடிக்கு பாராட்டு
09 Dec 2025டெல்லி, டெல்லியில் நடந்த தே.ஜ. கூட்டணி பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்துப் பாராட்டு தெரிவித்தனர்.
-
தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரிக்கும் குரல் கொடுப்பேன்: பிரம்மாண்ட கூட்டத்தில் விஜய் பேச்சு
09 Dec 2025புதுச்சேரி, புதுவையை பார்த்து தமிழக முதல்வர் கற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் கற்றுக்கொள்ளாது என்று த.வெ.க. தலைவர் விஜய் பேசினார். மேலும் நல்ல பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.
-
தாம்பரத்தில் அ.தி.மு.க. சார்பில் வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம்
09 Dec 2025சென்னை, தி.மு.க. அரசை கண்டித்து சென்னை தாம்பரத்தில் அ.தி.மு.க. சார்பில் வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
-
நீலகிரியில் குந்தா, பந்தலூர் 2 புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கம்
09 Dec 2025சென்னை, உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து, குந்தா மற்றும் பந்தலூர் என 2 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கப்பட்டுள்ளன.
-
சென்னை கலைவாணர் அரங்கில் ஜன.16-ல் பன்னாட்டு புத்தகக் காட்சி அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
09 Dec 2025சென்னை, சென்னை கலைவாணர் அரங்கில் பன்னாட்டு புத்தகக் காட்சி நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
ஆர்.எஸ்.எஸ். பற்றி பேச்சு: ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லி.யில் ஆளும் கட்சியினர் அமளி
09 Dec 2025டெல்லி, மக்களவையில் எஸ்.ஐ.ஆர். குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசத் தொடங்கிய நிலையில் அமளி ஏற்பட்டது.
-
புதுவை: விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்...!
09 Dec 2025புதுவை, புதுவையில் விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த சிவகங்கையை சேர்ந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 09-12-2025
09 Dec 2025 -
திருப்பரங்குன்றம் விவகாரம்: கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமை செயலாளர் ஆஜராக உத்தரவு
09 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமை செயலாளர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவில் விவகாரங்களில் கோர்ட் தலையிடக்கூடாது தமிழக அரசு சார்பில் வாதம்
09 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பான விசாரணையின் போது கோவில் விவகாரங்களில் கோர்ட் தலையிடக்கூடாது என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
-
பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம்
09 Dec 2025சென்னை, தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டார்.
-
வருகிற ஜனவரி 15-ம் தேதிக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்: அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு
09 Dec 2025புதுடெல்லி, வருகிற ஜனவரி 15-ம் தேதிக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: ஒரேநாளில் 450 விமானங்கள் ரத்து
09 Dec 2025டெல்லி, இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று ஒரேநாளில் 450 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
-
இண்டிகோ விமான சேவைகளை 5 சதவீதம் வரை குறைக்க உத்தரவு
09 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ விமான சேவைகளை குறைக்க விமான போக்குவரத்து துறை அதிரடியாக உத்தவிட்டுள்ளது.
-
ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டிற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
09 Dec 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வட இந்திய சாலைகளுக்கு வ.உ.சி., பாரதி பெயர்கள் வைக்காதது ஏன்..? மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி
09 Dec 2025டெல்லி, வ.உ.சி., பாரதி பெயர்கள் வட இந்திய சாலையில் வைக்கப்பட்டிருக்கிறதா என்று திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மத்திய அரசு இணையதளத்தில் வக்பு சொத்துகள் பதிவேற்றம்
09 Dec 2025புதுடெல்லி, மத்திய அரசு இணையதளத்தில் 5.17 லட்சம் வக்பு சொத்துகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
-
சோனியா காந்தி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
09 Dec 2025சென்னை, சோனியா காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது
09 Dec 2025சென்னை, புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 09-12-2025
09 Dec 2025 -
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு
09 Dec 2025திருவனந்தபுரம், கேரளாவில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தினர்.
-
இந்தியா - அமெரிக்கா இடையே இன்று வா்த்தக பேச்சுவாா்த்தை
09 Dec 2025டெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையே இன்று வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.


