Idhayam Matrimony

ரஜினியின் வாழ்க்கையை மாற்றிய அந்த 10 நிமிடம்

வெள்ளிக்கிழமை, 12 டிசம்பர் 2025      சினிமா
Rajini 2023 07 31

சென்னை, நடிகர் ரஜினிகாந்த்தின் திரை வாழ்வைப் பலப்படுத்திய திரைப்படம் அபூர்வ ராகங்கள். அதில் அவர் நடித்திருந்த அந்த 10 நிமிடம்தான் அவரது திரையுலக வாழக்கையை மாற்றியது.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். வயதில் 75, சினிமாவில் 50 ஆண்டுகள் என வாழ்நாள் சாதனையாளர்கள் பட்டியலில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். இந்த பிறந்த நாளுக்கும் பல பிரபலங்களிடமிருந்து வாழ்த்துகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன.

திரைத்துறையில் இன்று தவிர்க்கவே முடியாத சாதனைக்காரரான நடிகர் ரஜினிகாந்த்துக்கு 10 நிமிட காட்சிகள்தான் விதையாக இருந்ததிருக்கிறது. ரஜினியின் முதல் திரைப்படமான அபூர்வ ராகங்களில் 10 நிமிடங்களுக்கும் குறைவான காட்சிகளிலேயே நடித்திருப்பார். ஆனால், கோட் சூட்டுடன் கதவைத் திறந்து வருவதிலிருந்து தன் இறுதிக்காட்சி வரை பெரிய வசனங்கள் இல்லையென்றாலும் தன் உடல்மொழியால் அசத்தியிருப்பார்.

தனக்குக் கிடைத்த பாண்டியன் என்கிற சின்ன கதாபாத்திரத்தில் ஏதோ ஒன்றை வித்தியாசமாகச் செய்தது அவரை யாரென்று தேட வைத்து உச்சத்திற்கு அழைத்துச் சென்றது. இன்று ரஜினியின் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யாராவது 10 நிமிடம் நடித்தாலே தமிழ் சினிமாவின் பிரபலம் ஆகிவிடுவார் என்கிற நிலையை இந்த 50 ஆண்டுகளில் ரஜினி உருவாக்கி வைத்திருப்பது மிக அரிதான செயலாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து