முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, குடும்பத்தினருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

திங்கட்கிழமை, 2 பெப்ரவரி 2026      உலகம்
Sheik-Hasina 2024 08 11

டாக்கா, இரு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமரும், அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனாவுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சிறைத்தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வங்கதேசத்தில் பூதாகரமாக வெடித்து ஆட்சி மாற்றத்தை விளைவித்த மாணவா்கள் போராட்டத்தைத் தொடா்ந்து, கடந்த 2024-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா(78) இந்தியாவுக்கு தப்பிச் சென்றாா். அதன்பிறகு வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. வங்கதேசத்திலிருந்து வெளியேறி இந்தியாவில் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இரு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் திங்கள்கிழமை(பிப். 2) உத்தரவிட்டது. அரசு வீட்டுவசதி திட்டமொன்றில், அரசு நில ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டுகள் பதிவான நிலையில், நீதிமன்ற விசாரணையில் அவை நிரூபிக்கப்பட்டுள்ளன.

ஷேக் ஹசீனா மட்டுமில்லாது, மேற்கண்ட வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவருடைய உறவினர்களான முஜீப் சித்திக், துலீப் ரிச்வானா சித்திக், ஆஸ்மினா சித்திக் மற்றும் பிறருக்கும் சிறைத்தண்டனை விதித்து தாக்கா சிறப்பு நீதிபதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், அவர்கள் அனைவருக்கும் தலா 1 லட்சம் அபராதமும் விதிக்கப்ப்ட்டுள்ளது. அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து