முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா: ராஜ்நாத்சிங் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2026      தமிழகம்
Rajnath-Singh 2023 04 02

கோவை, கோவை ஈஷா யோக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 15) நடைபெற்றது. அங்குள்ள ஆதியோகி சிலை முன் நடைபெறும் இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றார்கள்.

இதையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும் 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர் மேலும், பக்தா்களின் கூட்ட நெரிசலை சமாளிக்கவும் பாதுகாப்பு சோதனைகளை தீவிரப்படுத்தவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 

முன்னதாக விழாவில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் விமானம் மூலம் கோவைக்கு மாலை 4.15 மணிக்கு வந்தார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டா் மூலமாக 4.25 மணிக்கு ஈஷா யோக மையத்துக்கு புறப்பட்டு சென்றார்.  பிறகு ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய நடைபெற்ற பூஜைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவா் இன்று (திங்கள்கிழமை) (பிப்.16) காலை 10.35 மணியளவில் அங்கிருந்து கோவை விமான நிலையம் வந்து, பின்னா், 10.45 மணிக்கு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து