எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பரபரப்பான அரசியல் சூழலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ் டெல்லி சென்றார். மத்திய அமைச்சர் அமித்ஸாவை சந்தித்து பேசும் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தொகுதி உடன்பாட்டை இறுதி செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் கட்சி ஆகிய 4 முனை போட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து கூட்டணி கட்சிகளிடயே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து வருகிறது.
மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றாக தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி விட்டனர். பிரதமர் மோடி கடந்த மாதம் சென்னையை அடுத்துள்ள மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். நேற்று முன்தினம் 2-வது முறையாக தமிழகம் வந்த பிரதமர் மோடி மதுரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம், மதுரையில் உள்ள தனியார் விடுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பா.ஜ.க. தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஷ் கோயல், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. தமிழக தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பா.ம.க. தலைவர் அன்புமணி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர், ஐ.ஜே.கே. தலைவர் ரவி பச்சமுத்து, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன்ஜி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனையின்போது அவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாக தெரிகிறது. மேலும் பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கியதாகவும் தெரிகிறது. அதில் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் அதிக தொகுதிகள் இடம் பெற்றிருந்ததாகவும், அதில் பல தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சில தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க பா.ஜ.க. சார்பில் கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் பா.ம.க., அ.ம.மு.க. உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகளும் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அப்போது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு முடிவை தெரிவிப்பதாக கூட்டணி கட்சி தலைவர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தெரிகிறது. இந்த கூட்டம் சில நிமிடங்களில் நடந்து முடிந்தது.
இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் ஓரளவு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பா.ஜ.க. 50 தொகுதிகளை கேட்டுள்ளது. ஆனால் பா.ஜ.க.வுக்கு 35 தொகுதிகளை கொடுக்க அ.தி.மு.க. முன்வந்துள்ளது. அதில் இருந்து டி.டி.வி. தினகரனுக்கு 5 அல்லது 6 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. மீதமுள்ள தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிடும்.
அதேபோல் பா.ம.க.வுக்கு ஏற்கனவே 17 தொகுதிகள் கொடுக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இல்லாததால் பா.ம.க.வுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனேகமாக 25 தொகுதிகள் வரை அக்கட்சிக்கு கிடைக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஜி.கே.வாசனுக்கு 3 தொகுதிகளும், ஐ.ஜே.கே.வுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம், புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. இவர்களில் சில கட்சிகள் இரட்டை இலை சின்னத்திலும், சில கட்சிகள் தாமரை சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்து உள்ளன. தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ள நிலையில் அ.தி.மு.க. 170 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு உள்ளது. மீதமுள்ள 64 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாட்டை இறுதி செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக காலை 9.50 மணிக்கு தனபால் எம்.பி. விமானம் மூலம் டெல்லி சென்றார். எடப்பாடி பழனிசாமி கடந்த முறை, டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அவருடன், தனபால் எம்.பி. சென்றிருந்தார். எனவே இப்போதும் அவர் சென்றுள்ளார்.
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் பா.ஜ.க. தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் மற்றும் பா.ஜ.க. மேலிட தலைவர்களும் பங்கேற்கிறார்கள். அப்போது கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாடு கையெழுத்தானதும் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புகிறார். அதன்பிறகு பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு கையெழுத்தாக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது: அமைச்சர் துரைமுருகன்
16 Mar 2026சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத்தேர்தல் அதிகாரி ஆலோசனை
16 Mar 2026சென்னை, தமிழக பேரவைத் தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று (மார்ச் 16) ஆலோசனை மேற்கொண்டார்.
-
பா.ஜ.க.வுடன் செல்பவர்கள் யாராக இருந்தாலும் தோல்வி நிச்சயம்: டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து
16 Mar 2026சென்னை, பா.ஜ.க.வுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001-இல் தி.மு.க. தோற்றது.
-
6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீனா-வடகொரியா இடையே விமான சேவை தொடக்கம்
16 Mar 2026பெய்ஜிங், சீனா- வடகொரியா இடையேயான விமானப் போக்குவரத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
-
காவல்துறையினரை தாக்கி தப்பிக்க முயற்சி: சென்னை மாதவரத்தில் ரவுடி என்கவுண்டர் சுட்டுக்கொலை
16 Mar 2026சென்னை, சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
-
மகளிா் ஆதரவு இருக்கும் வரை, தி.மு.க. அரசை எவராலும் வீழ்த்த முடியாது: முதல்வர்
16 Mar 2026சென்னை, பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது.
-
வாக்குகளை எண்ண கூடுதல் இடைவெளி: தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
16 Mar 2026புதுடெல்லி, வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் இடைவெளி உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்ததை அடுத்து இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19, 20-ம் தேதிகளில் விடுமுறை
16 Mar 2026டெல்லி, நவராத்திரி, ரம்ஜான், குடீ பாடவா ஆகிய பண்டிகைகள் வருவதால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19,20ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த ஒரு மாதத்திற்கு தி.முக.வினர் ஓய்வின்றி தோ்தல் பணியாற்றுங்கள்: கட்சியினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுரை
16 Mar 2026சென்னை, அடுத்த ஒரு மாதம் தி.மு.க.வினா் ஓய்வின்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
-
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு
16 Mar 2026சென்னை, 2025-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு
16 Mar 2026சென்னை, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
-
தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் 5 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
16 Mar 2026மதுரை, தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வகையில் சந்தேகத்துக்கு இடமான 5 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதன
-
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 550 இந்தியர்கள் ஆர்மீனியாவுக்கு ஜெய்சங்கர் நன்றி
16 Mar 2026புதுடெல்லி, ஈரானில் இருந்து அர்மீனியா வழியாக 550க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்: விளம்பரங்கள், போஸ்டர்களை அகற்றும் அடிக்கும் பணி தீவிரம்
16 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடித்து மறைக்கும் பணிகளும் போஸ்டர்கள் அகற்றும் பணிகளும
-
மேற்குவங்க மாநிலத்திற்கு புதிய தலைமைச்செயலாளர் நியமனம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
16 Mar 2026கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
நேபாளத்தில் சாலை விபத்தில் பலியான 7 பேர் உடல்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை
16 Mar 2026சென்னை, நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டபோது சாலை விபத்தில் சிக்கி 7 தமிழா்கள் உயிரிழந்தனா்.
-
மத்திய கிழக்கில் மோதலால் 4,335 இந்திய விமானங்கள் ரத்து: மத்திய அரசு தகவல்
16 Mar 2026புதுடெல்லி, மேற்காசிய மோதலால் காரணமாக இந்திய விமானங்கள் ரத்து குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சா? வதந்திகளை நம்ப வேண்டாம் என த.வெ.க. திட்டவட்டமாக மறுப்பு
16 Mar 2026சென்னை, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வெளியானதற்கு அக்கட்சியின்
-
சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை ஒன் பேட்டில் ஆஃப்டர் அனத
-
பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்: ஆஸ்கர் விழா மேடையில் ஹாலிவுட் நடிகர் ஜேவியரின் பேச்சால் பரபரப்பு
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம் ஆஸ்கர் விருது விழாவில், “போர் வேண்டாம். பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
த.வெ.க. - என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை பேச்சு நடத்தப்படவில்லை: செங்கோட்டையன் பேட்டி
16 Mar 2026கோவை, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை என்று த.வெ.க.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : சென்னையில் விசாரணையை நடத்த சி.பி.ஐ.க்கு விஜய் கடிதம்
16 Mar 2026சென்னை, கரூா் கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை அல்லது தமிழ்நாட்டில் ஏதேனும் ஓரிடத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சி.பி.ஐ.
-
திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத 41 லட்சம் ரூபாய் பறிமுதல்: தேர்தல் பறக்கும் பட்டையினர் நடவடிக்கை
16 Mar 2026திருப்பூர், திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ. 41 லட்சம் தேர்தல் பறக்கும் பட்டையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
-
தேர்தல் நடத்தை விதி அமல் எதிரொலி: மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனுக்கள் பெட்டி
16 Mar 2026கோவை, தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Mar 2026- மன்னார்குடி ராஜகோபலசுவாமி தங்க சூரிய பிரபை வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி.
- தொட்டியம் காளியம்மன் பவனி


