முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2026      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவை நடத்துவதற்கு ஒரு தலைமை அதிகாரி இருப்பார். அவருக்கு உதவியாக 3 வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் இருப்பார்கள். அந்த வகையில், மொத்தம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 160 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த முறை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கூடுதலாக ஊதியம் வழங்கப்பட இருக்கிறது. அதாவது, 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. அந்த வகையில், தேர்தல் நாளுக்கான ஊதியம் மற்றும் 2 நாட்கள் கட்டாய பயிற்சிக்காக, தேர்தல் ஆணையம் ஒரு வாக்குச்சாவடிக்கு சுமார் ரூ.12,500 ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் தமிழக சட்டசபை தேர்தலுக்கான மொத்த செலவு சுமார் ரூ.100 கோடியாக உயர்ந்துள்ளது. 

2014-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.350 ஊதியம் பெற்று வந்த தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், இப்போது ஒரு நாளைக்கு ரூ.500 அல்லது மொத்தமாக ரூ.2 ஆயிரம் பெறுவார்கள். ஒரு நாளைக்கு ரூ.250 கௌரவ ஊதியமாக பெற்று வந்த வாக்குச்சாவடி அலுவலர்கள், இப்போது ஒரு நாளைக்கு ரூ.400 அல்லது மொத்தமாக ரூ.1,600 பெறுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து