முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருகிற 6-ம் தேதி முதல் நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை மீண்டும் துவங்குகிறது

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2026      தமிழகம்
Nagai-Sri-Lanka 2023-10-08

நாகப்பட்டினம், நாகப்பட்டினம் - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை வருகிற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் தொடங்குகிறது. 

இதுகுறித்து கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு சிவகங்கை பயணிகள் கப்பல் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த கப்பல் போக்குவரத்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு வருகிற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் தொடங்குகிறது. பயணிகள் கட்டணம், எடுத்துச்செல்லப்படும் சரக்கு அளவு ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் இல்லை.

மேலும் புதிய கப்பல் பணிகள் நிறைவடைந்து, அதனை இயக்குவதற்கான அனைத்து சான்றிதழ்களும் பெறப்பட்டுவிட்டன. இந்த மாதம் 2-வது வாரத்திற்குள் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு புதிய கப்பல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து