முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான், லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் 2 முக்கிய தலைவர்கள் கொலை

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2026      உலகம்
Israel 2024-12-29

டெல் அவீவ், ஈரான் மற்றும் லெபனானின் ராணுவ இலக்குகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படை, ஹிஸ்புல்லா அமைப்பின் இரண்டு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்.28-ம் தேதி தாக்குதல்களைத் தொடங்கின. இதில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். மேலும், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் உட்பட 40-க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. மேலும், ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது.இந்நிலையில், ஈரான் மற்றும் லெபனானின் ராணுவ இலக்குகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘ஈரான் மற்றம் லெபனான் நகரங்களில் உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து ஒரே நேரத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தாக்குதல்களை நடத்தி வருகிறது. ற்கு லெபனானில் ஐடிஎப் (Israel Defense Forces) வீரர்கள் எல்லைப் பகுதிகளுக்கு அருகில் பல இடங்களில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, ஹிஸ்புல்லா (Hezbollah) தீவிரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறோம். ஹிஸ்புல்லாவும், ஈரான் ஆட்சியாளர்களும் இஸ்ரேலை தாக்க முடிவெடுத்தனர். அதற்கான விளைவுகளை அவர்கள் சந்திப்பார்கள்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேல் நடத்திய மற்றொரு துல்லிய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் புலனாய்வு தலைமையகத் தலைவர் ஹுசைன் மக்லெட் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. த்துடன், ஹிஸ்புல்லா மற்றும் ஈரானிய ஆட்சியுடன் தொடர்புடைய பல கட்டளை மையங்களும், தைரே நகரில் ஹிஸ்புல்லா ஆயுதங்களை சேமித்து வைத்திருந்த இடமும் தாக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து