முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மற்றொரு போருக்கு தயாராகும் இந்தியா: பாகிஸ்தான் அதிபரின் பேச்சுக்கு பார்லி., உறுப்பினர்கள் எதிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2026      உலகம்
Pakis

லாகூர், மற்றொரு போருக்கு தயாராகும் இந்தியா என்று நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் அதிபரின் பேச்சுக்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி, ‘‘பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மற்றொரு போருக்குத் தயாராகி வருகிறது. மற்றொரு போருக்குத் தயாராகி வருவதாக அந்நாட்டு தலைவர்கள் கூறுகிறார்கள். வாழ்நாள் முழுவதும் அமைதிக்காகப் பாடுபடும் நான், இதைப் பரிந்துரைக்க மாட்டேன்.

அவர்களுக்கு (இந்தியா) எனது செய்தி என்னவென்றால், போர் உத்திக்கான அறையில் இருந்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை மேஜைகளுக்கு வர வேண்டும். அதுதான் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கான ஒரே வழி” என்று தெரிவித்தார்.

ஆசிப் அலி சர்தாரியின் உரைக்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேறு என்று அவர்கள் கோஷங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர். பெரும் கூச்சலுக்கு மத்தியில் ஆசிப் அலி சர்தாரி தனது உரையை வாசித்தார். 

கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா கடந்த ஆண்டு மே மாதத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடங்கியது. இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இதன் காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே 4 நாட்களுக்கு போர் நடந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் வேண்டுகோளை ஏற்று இந்தியா சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது.

ஆசிப் அலி சர்தாரி தனது உரையில், ஆப்கனிஸ்தான் உடனான மோதல் குறித்தும் குறிப்பிட்டார். ‘‘இந்தியாவின் பிரதிநிதியாக ஆப்கானிஸ்தான் செயல்படுகிறது. மற்றொரு நாட்டின் விருப்பத்துக்காக ஆப்கனிஸ்தானை போர்க்களமாக பயன்படுத்தப்படுவதை அந்நாடு நிறுத்திக்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண ஆப்கனிஸ்தான் முன்வர வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து