முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போருக்கு மத்தியில் 4.3 ரிக்டர் அளவில் ஈரானில் திடீர் நிலநடுக்கம்

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2026      உலகம்
Earthquack 2024-12-06

தெஹ்ரான், மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கெராஷ் பகுதியில், செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) நிலப்பகுதியில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஏற்கெனவே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் மீது தாக்குதல் நடத்தி வருவதால் இந்த நிலநடுக்கம் அங்கு மேலும் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஈரானின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து வான்வழித் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இதையடுத்து, பழிதீர்க்கும் விதமாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவத் தளங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரான் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து