முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லெபனானில் கூடுதலாக பகுதிகளை கைப்பற்ற இஸ்ரேல் படைகள் தீவிரம்

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2026      உலகம்
Israel

டெல்அவீவ், லெபனான் நாட்டில் கூடுதல் பகுதிகளைக் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென இஸ்ரேல் ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் தளங்களின் மீது ஈரான் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா மற்றும் யேமனின் ஹவுதி கிளர்ச்சிப் படைகளும் களமிறங்கியுள்ளன. இதனால், மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

 

இந்த நிலையில், லெபனானின் மீதும் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனையடுத்து, லெபனானில் மேலும் சில பகுதிகளைக் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இஸ்ரேல் ராணுவத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து