முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 787 ஆனது

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2026      உலகம்
Iran-Death--2026-03-03

தெஹ்ரான், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் இதுவரை 787 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த சனிக்கிழமை (பிப். 28) நடத்திய தாக்குதல்களில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனால், பெரும்பாலான நாடுகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளின் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இத்துடன், ஈரானின் மினாப் நகரத்தில் உள்ள பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 160 சிறுமிகள் கொல்லப்பட்டது உலகளவில் அதிர்வலைகளை உருவாக்கியது.

கொல்லப்பட்ட சிறுமிகளின் இறுதிச் சடங்கிற்காகத் தோண்டப்பட்ட குழிகளின் புகைப்படத்தை ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 787 பேர் கொல்லப்பட்டதாக, ஈரானின் ரெட் கிரெசண்ட் அமைப்பு அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து