முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்ப் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கில் தேர்வுகள் ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2026      உலகம்
CBSE 2023 07-14

மஸ்கட், மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தால் அங்குள்ள நாடுகளில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கடந்த சனிக்கிழமை (பிப். 28) அன்று கொல்லப்பட்டார். இதையடுத்து, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள ஈரான் அரசு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே போர்ப் பதற்றம் நிலவி வருவதால், அந்நாடுகளில் மார்ச் 5 அன்று நடைபெற வேண்டிய சிபிஎஸ்இ-யின் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஒத்திவைக்கப்படும் தேர்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், மார்ச் 5 அன்று அங்குள்ள நிலைமையை மதிப்பாய்வு செய்தபின்னர் அடுத்தக்கட்ட தகவல்கள் வெளியாகும் என்றும் சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, ஈரானின் தலைவர் கமேனி கொல்லப்பட்டது கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் மார்ச் 2 அன்று நடைபெற வேண்டிய சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து