முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: லெபனானில் 30 ஆயிரம் பேர் இடமாற்றம் - ஐ.நா. தகவல்

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2026      உலகம்
UNO-2023 04 06

பெய்ரூட், லெபனான் நாட்டின் மீதான் இஸ்ரேலின் தாக்குதல்களால் அங்கு வசிக்கும் சுமார் 30,000 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானின் பல்வேறு கட்டமைப்புகள் மற்றும் அந்நாட்டின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனியின் வீட்டின் மீது கடந்த சனிக்கிழமை (பிப். 28) நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இதையடுத்து, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் தளங்களின் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு மிகப் பெரியளவில் மோதல்கள் வெடித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் யேமனின் ஹவுதி கிளர்ச்சிப் படைகளும் களமிறங்கியுள்ளன. இதனால், மத்திய கிழக்கு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதல்கள் நடைபெறும் லெபனான் பகுதிகளில் வசித்து வரும் 30,000-க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாக, ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து