முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் மக்கள் உடனே வெளியேற வேண்டும்: அமெரிக்கா உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2026      உலகம்
Whit haues 2023-08-29

நியூயார்க், மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஈரான் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ப் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 14 நாடுகளில் வசிக்கும் தனது நாட்டு குடிமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளான பஹ்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல், குவைத், லெபனான், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன், சிரியா நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கர்கள் வணிக ரீதியிலான விமானங்கள் கிடைக்கும்போதே அங்கிருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து