முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹோர்முஸ் நீரினை மூடிய ஈரான் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2026      உலகம்
Oil

தெஹ்ரான், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரினை மூடப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

ஹோர்முஸ் நீரினையைக் கடந்து செல்லப்படும் கப்பல்கள் தாக்கப்படும் என்றும், தீக்கரையாக்கப்படும் என்றும் இஸ்லாகிய புரட்சிகர காவல் படையின் தலைமைத் தளபதி இப்ராஹிம் ஜபாரி எச்சரித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைத்துத் தாக்கி வருகிறது.

சவூதி அரேபியாவின் தம்மாம் பகுதியில் உள்ள ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நோக்கி ஈரான் ஏவிய ட்ரோன்களை சவூதி ராணுவம் சுட்டு வீழ்த்தியது. பாதுகாப்புக் கருதி, அந்த நிலையம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த மோதல் போக்கினால், சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து எரிபொருள் ஏற்றி வந்த 150-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையைக் கடக்க முடியாமல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளன.

ஈரான் மற்றும் ஓமன் இடையே அமைந்துள்ள இந்த ஜலசந்தி, உலகளாவிய வர்த்தகத்தில் மிக முக்கியமானதாகும். இது பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடாவுடனும், அதற்கு அப்பால் அரேபிய கடலுடனும் இணைக்கிறது. ஈரான் மற்றும் ஓமன் எல்லையாக இருந்தாலும், இது ஒரு சர்வதேச கப்பல் வழித்தடமாகவுள்ளது.

ஹோா்முஸ் நீரிணை நீண்ட காலம் மூடப்பட்டாலோ அல்லது வளைகுடா நாடுகளின் எண்ணெய் கிணறுகள் சேதமடைந்தாலோ, விலை கட்டுக்கடங்காமல் உயர வாய்ப்புள்ளது. இதன் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமை ஒரே நாளில் 7 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்தது. அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 7.4 சதவீதம் அதிகரித்து, ஒரு பீப்பாய் 71.97 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 7.7 சதவீதம் அதிகரித்து, 78.46 டாலராகவும் வர்த்தகமானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து