முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2026      தமிழகம்      அரசியல்
Selvabaru 2023-02-19

சென்னை, தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூட்டணியில் முறிவு இல்லை என்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

தி.மு.க. - காங்கிரஸ் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் நேற்று சென்னையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, டி.ஆர். பாலு ஆகியோர் உடனிருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய செல்வப்பெருந்தகை, முதல்வர் ஸ்டாலினை ப. சிதம்பரம் சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தி.மு.க.வுடன் நாங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். பேசி முடித்ததும் உங்களுக்குச் சொல்வோம். பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. தி.மு.க. எங்களுக்கு கெடு விதிக்கவில்லை. கூட்டணியில் எந்த முறிவும் இல்லை. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை" என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து