முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு: தி.மு.க.வுடன் உடன்பாடு கையெழுத்து

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2026      தமிழகம்      அரசியல்
DMK-Offces 2023 03 31

சென்னை, மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க. தரப்பிலிருந்து அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க.) தலைவரும் தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலினுடன் கலந்து பேசியதில் தொகுதிப் பங்கீட்டில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டு கையெழுத்தானது. 

மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டது. தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை கடந்த பிப். 22 முதல் நடைபெற்று வருகிறது. தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. உள்பட புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை இழுபறியில் உள்ளது.

இந்நிலையில், நேற்று (மார்ச் 3) தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க.) தரப்பிலிருந்து அக்கட்சியின் பொருளாளர் எல். கே. சுதீஷ் திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க.) தலைவரும் தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலினுடன் கலந்து பேசியதில் தொகுதிப் பங்கீட்டில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டு கையெழுத்தானது.  சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து