முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமேனி படுகொலையில் மோடி அரசின் மவுனம் ஏன்? சோனியா காந்தி கேள்வி

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2026      இந்தியா
Sonia 2024-02-13

புதுடெல்லி, ஈரான் உச்ச தலைவர் அயத்​துல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசு மவுனம் காப்பது நடுநிலை அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச ஒழுங்கு சீர்குலைந்துள்ள இந்த நிலையில் மவுனம் என்பது பொறுப்பைத் துறப்பதற்குச் சமம் என்று விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவரது கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் சோனியா காந்தி, ‘‘பிப். 28-ம் தேதி அமெரிக்காவும் - இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதல்களில் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை மார்ச் 1 அன்று ஈரான் உறுதிப்படுத்தியது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், அதற்கு நடுவில் பதவியில் இருக்கும் ஒரு நாட்டின் தலைவரை கொல்வது சர்வதேச உறவுகளில் தீவிர சிக்கலை ஏற்படுத்தும்.

அதிர்ச்சிகரமான இந்த விவகாரத்தில் இந்தியா காக்கும் மவுனம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அந்த படுகொலையையும் ஈரானின் இறையாண்மை மீறலையும் இந்திய அரசு கண்டிக்காமல் தவிர்த்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தொடங்கிவைத்த தாக்குதல்களைப் பற்றி குறிப்பிடாமல், ஈரான் மேற்கொண்ட பதிலடி தாக்குதலை மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி கண்டித்துள்ளார். 

அதோடு, இந்த விவகாரம் “ஆழ்ந்த கவலையை” ஏற்படுத்துவதாகவும், “பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்” என்றும் பொதுவான கருத்துகளை மட்டுமே பிரதமர் மோடி வெளியிட்டார். ஒரு வெளிநாட்டு தலைவர் கொல்லப்பட்டது குறித்து, இறையாண்மை அடிப்படையிலும், சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலும் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அப்படி ஒரு தெளிவான நிலைப்பாடு இந்திய அரசிடம் இருந்து வெளிப்படவில்லை. இது நமது வெளிநாட்டுக் கொள்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.

இந்தச் சூழலில் மவுனம் நடுநிலையல்ல. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, கொள்கை அளவிலான எதிர்ப்பை வெளிப்படுத்தாவிட்டால், சர்வதேச நெறிமுறைகள் சீரழிவதை அது எளிதாக்கும். சர்வதேச ஒழுங்கு சீர்குலைந்துள்ள இந்த நிலையில், மவுனம் என்பது பொறுப்பைத் துறப்பதாகும். இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து